Untitled Document
2. காட்சிக் காதை




110
உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும்
செயிருடன் வந்தவிச் சேயிழை தன்னினும்
நன்னுதல் வியக்கும் நலத்தோ ரியாரென
மன்னவன் உரைப்ப மாபெருந் தேவி


106
உரை
110

       ஆங்கு உயிருடன் சென்ற ஒரு மகள் தன்னினும் செயிருடன் வந்த இச் சேயிழை தன்னினும் - அப்பொழுதே கணவன் உயிரோடே கூடிச் சென்ற ஒப்பற்ற பெருங்கோப் பெண்டும் கணவனை இழந்த செற்றத்தோடே இவண் வந்த இக் கண்ணகியுமாய இருவருள்ளும், நன்னுதல் வியக்கும் நலத்தோர் யார் என மன்னவன் உரைப்ப - நன்னுதால் வியக்கத் தக்க சிறப்பினையுடையோர் யார் என்று மன்னன் கேட்ப ;

       நன்னுதல், முன்னிலைப்பெயர். நலம் - கற்பு மேம்பாடு. 4"பாம் பறியும் பாம்பின் கால்" என்றபடி, கற்புடை மகளிரியல்பு கற் புடை மகளிர்க்கே புலனாமாகலின் 'நன்னுதல் . . . . . . யாரெனக்' கேட்டனன் என்க.