Untitled Document
2. காட்சிக் காதை

115
மாலை வெண்குடை மன்னவன் விரும்பி

நூலறி புலவரை நோக்க ஆங்கவர்


115
உரை
116

      மாலை வெண்குடை மன்னவன் விரும்பி நூல் அறி புலவரை நோக்க - மாலை அணிந்த வெண்கொற்றக் குடையினை யுடைய அரசன் தன் தேவி கூறியதன்கண் விருப்புற்று அமைச்சரை நோக்க;

      நூலறிபுலவர் - அரசியல் நூலறிந்த அமைச்சர் ; 1"மதி நுட்பம் நூலோ டுடையார்க்கு" என்றார் வள்ளுவனாரும்.


1 குறள். 64 : 6.