Untitled Document
2. காட்சிக் காதை




125
பொதியிற் குன்றத்துக் கற்கால் கொண்டு
முதுநீர்க் காவிரி முன்றுறைப் படுத்தல்
மறத்தகை நெடுவா ளெங்குடிப் பிறந்தோர்க்குச்
சிறப்பொடு வரூஉஞ் செய்கையோ அன்று


122
உரை
125

      பொதியில் குன்றத்துக் கற் கால்கொண்டு முதுநீர்க் காவிரி முன்துறைப்படுத்தல் - பொதியின் மலையில் கல்லினைப் பெயர்த்துப் பழையதாய் வரும் நீரினையுடைய காவிரியாற்றின் துறைக்கண் நீர்ப்படுத்தல், மறத்தகை நெடுவாள் எம் குடிப் பிறந்தோர்க்குச் சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று - மறத்தின் கூறுபாடமைந்த மாற்றார்க்குத் தீங்கு செய்யும் நீண்ட வாளினையுடைய எமது குடியிலே தோன்றினார்க்குப் பெருமை யொடு பட்ட செயல் அன்றாம்;

      முதுமையைக் காவிரிக்கு ஏற்றுக. மறத்தகை என்னும் அடை வாளுக்கும் குடிக்கும் பொருந்தும் ; மறத்தகையும் நெடுவாளுமுடைய குடியெனலுமாம். சேய்மைக் கண்ணதாய வேற்று நாட்டிலே சென்று பகை வென்று எடுத்துப் படுத்தலே வீரக்குடியிலே தோன்றி னார்க்குப் பெருமையுடைய செய்கையாம் என்றானென்க..