Untitled Document
2. காட்சிக் காதை





135





140
வழிநின்று பயவா மாண்பில் வாழ்க்கை
கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும்
முதுகுடிப் பிறந்த முதிராச் செல்வியை
மதிமுடிக் களித்த மகட்பாற் காஞ்சியும்
தென்றிசை யென்றன் வஞ்சியொடு வடதிசை

நின்றெதி ரூன்றிய நீள்பெருங் காஞ்சியும்
நிலவுக்கதி ரளைந்த நீள்பெருஞ் சென்னி
அலர்மந் தாரமோடு ஆங்கயல் மலர்ந்த
வேங்கையொடு தொடுத்த விளங்குவிறல் மாலை
மேம்பட மலைதலும் காண்குவல் ஈங்கெனக்


131
உரை
140

       வழி நின்று பயவா மாண்பு இல் வாழ்க்கை கழிந் தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும் - நிலைத்து நின்று பயன்படாத மாட்சி இல்லாத வாழ்க்கையினை இறந்தோர் இற வாதோர்க்கு உணர்த்திய யாக்கை நிலையாமையாகிய காஞ்சி யும், முதுகுடிப் பிறந்த முதிராச் செல்வியை மதி முடிக்கு அளித்த மகட்பாற் காஞ்சியும் - தனது தொல் குடியிற் றோன் றிய இளஞ் செல்வியாகிய உமையைப் பிறை சூடும் இறைவ னுக்குக் கொடுத்த மகட்பாற் காஞ்சியும், தென் திசை என்றன் வஞ்சியொடு வடதிசை நின்று எதிர் ஊன்றிய நீள்பெருங் காஞ் சியும் - தென்றிசையினின்று மேற்செல்லும் எனது வஞ்சியோடு வடதிசைக்கண் எதிராக நின்று தடுத்த நீண்ட பெருங் காஞ்சி யும், நிலவுக் கதிர் அளைந்த நீள் பெருஞ் சென்னி - நிலாவின் தண் கதிர்கள் படிந்த உயர்ந்த பெரிய முடியின்கண், அலர் மந்தாரமோடு ஆங்கு அயல் மலர்ந்த வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை - மலர்ந்த மந்தார மாலையோடே அவ் விடத்து அதன் பக்கலில் மலர்ந்த வேங்கைப் பூவாற் றொடுத்த ஒளி அமைந்த வெற்றி மாலையும் ஆகிய இவற்றை, மேம்பட மலைதலும் காண்குவல் ஈங்கு என - மேன்மையுண்டாகச் சூடு தலையும் இப்பொழுது காண்பேனெனச் சொல்லி;

       கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சி - இளமை கழிந்து அறிவு மிக்கோர் இளமை கழியாத அறிவின் மாக்கட்குக் காட்டிய முதுகாஞ்சி என்றலுமாம்; 1"கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்" என்பதற்கு நச்சினார்க்கினியரெழுதிய உரை காண்க. மகட்பாற் காஞ்சியின் இலக்கணம் 2"நிகர்த்துமேல் வந்த வேந்த னொடு முதுகுடி, மகட்பா டஞ்சிய மகட்பா லானும்" எனத் தொல் காப்பியத்தும், 3"ஏந்திழையாட் டருகெனும், வேந்தனொடு வேறு நின்றன்று" என வெண்பா மாலையினும் கூறப்பட்டுளது. மகட் பாடஞ்சிய என்புழியும் மகளைக் கொடுக்க அஞ்சி மாறுபட்ட என் பதே கருத்தாகும். இவ்வாற்றால் ஒருவற்கு மகட்கொடை மறுத் தல் மகட்பாற் காஞ்சியாதலன்றி மகட்கொடை அஃதாகாமையின், முதுகுடிப் பிறந்த முதிராச் செல்வியை மதிமுடிக் களித்தமை மகட்பாற் காஞ்சியாதல் யாங்ஙனமெனின், இறைவற்கு இனியனாய் அளித் தான் எனக் கொண்டு, மகட்டருகென்று மேல்வந்தாற்கு அளித்தில னென்னும் எதிர்மறைப் பொருள் பற்றி மகட்பாற் காஞ்சி யென்றல் சாலுமென்க. 'தென்றிசை யென்றன் வஞ்சியொடு வடதிசை, நின்றெதி ரூன்றிய நீள்பெருங் காஞ்சி' "வஞ்சியுங் காஞ்சியுந் தம்முள் மாறே" என்னும் பன்னிரு படலத்தைத் தழுவியதாகும். அடிகள் பிறாண்டும் அந் நூற் கருத்தினைத் தழுவிச் சேறல் அறியற்பாற்று. பெருங்காஞ்சியாவது 4"மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமை" என்பர் தொல்காப்பியர். 5"தாங்குதிறன் மறவர் தத்த மாற்றல், வீங்குபெரும் படையின் வெளிப்படுத் தன்று" என்பர் ஐயனாரிதனார். வேங்கையொடு - வேங்கையால். மாலை மேம்பட மலைதலும் என்றமையால் முற்கூறிப் போந்த காஞ்சித் துறைகள் அவற

1 தொல், பொருள். 79. 2 தொவல். பொருள். 79.
3
புற. வெ. 4 ; 24. 4 தொல். பொருள். 79.
5 புற. வெ. 4 ; 6.