|
Untitled Document
155
|
நும்போல் வேந்தர்
நும்மோ டிகலிக்
கொங்கர்செங் களத்துக் கொடுவரிக் கயற்கொடி
பகைபுறத்துத் தந்தன ராயினும் ஆங்கவை
திகைமுக வேழத்தின் செவியகம் புக்கன |
|
நும்
போல் வேந்தர் நும்மோடு இகலி - நும்மை ஒத்த அரசர் நும்முடன் மாறுபட்டு, கொங்கர்
செங்களத்துக் கொடுவரிக் கயற் கொடி பகைபுறத்துத் தந்தனர் ஆயி னும் - கொங்கரது போர்க்களத்துப்
பொருதவிடத்தே புலிக் கொடியும் மீனக்கொடியும் நினக்குத் தந்து ஓடினராயினும், ஆங்கு அவை
திகை முக வேழத்தின் செவி அகம் புக்கன - அச் செயல்கள் திக்கு யானைகளின் காதுகளிற்
பட்டன;
நும்போல்
மன்னர் என்றான், குலம் பற்றி. செங்களம் - குருதி யாற் சிவந்த களம். செங்களத்துப்
பகைபுறத்தென்க. பகைத்தல் ஈண்டுப் பொருதல். சோழ பாண்டியர் இவனொடு கொங்கர் செங்களத்துப்
பொருத போரில் தம் கொடிகளைக் போகட்டு ஓடின ரென்க. இவன் ஆண்டுக் களவேள்வி செய்தனனென்பது
1"கொங்கர்
செங்களம் வேட்டு" என்றமையாற் பெறப்படும். திகை - திசை. திகை முக வேழத்தின் செவியகம்
புக்கனவென்றது அச் செயல் யாண்டும் பரவின என்றவாறு.
|
1
சிலப். 29, உரைப்.
|
|