|
Untitled Document
180
|
நிறையருந் தானை வேந்தனும்
நேர்ந்து
கூடார் வஞ்சிக் கூட்டுண்டு சிறந்த
வாடா வஞ்சி மாநகர் புக்கபின் |
|
நிறை
யருந் தானை வேந்தனும் நேர்ந்து - பகைமேற் செல்லும்பொழுது நிறுத்தற்கரிய படையினையுடைய
மன்னனும் அதற்கு உடன்பட்டு, கூடார் வஞ்சிக் கூட்டுண்டு சிறந்த வாடாவஞ்சி மா நகர் புக்கபின்
- நண்ணாரது எடுத்துச் செல வாற்கொண்ட திறையினைக் கொண்டு சிறப்புற்ற வஞ்சி நக ரத்தே
மீண்டு சென்று புக்க பின்னர்;
வஞ்சி - பகைமேற்சேறல்; வஞ்சிக் கூட்டு - மேற்சேறலாற் கொண்ட திறை; கூடாரது திறையென்க.
உண்டு - கொண்டு. வாடா வஞ்சி, வெளிப்படை. அரசன் பேராற்றங்கரையினின்றும் போந்து
புக்கபின் என்க. |
|