|
25
30
|
குன்றக் குரவையொடு கொடிச்சியர்
பாடலும்
வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும்
தினைக்குறு வள்ளையும் புனத்தெழு விளியும்
நறவுக்கண் ணுடைத்த குறவ ரோதையும்
பறையிசை அருவிப் பயங்கெழும் ஓதையும்
புலியொடு பொரூஉம் புகர்முக வோதையும்
கலிகெழு மீமிசைச் சேணோன் ஓதையும்
பயம்பில்வீழ் யானைப் பாக ரோதையும்
இயங்குபடை யரவமோ டியாங்கணு மொலிப்ப |
|
குன்றக்
குரவையொடு கொடிச்சியர் பாடலும் - குன்றத்துக் குரவையாடினாரொலியும் குறத்தியர் பாட்டொலி
யும், வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும் - வெற்றி பொருந் திய முருகனுடைய வேலன் பாட்டோசையும்,
தினைக் குறு வள்ளையும் - தினையைக் குற்றுவாரது உலக்கைப் பாட்டொலி யும், புனத்து எழு
விளியும் - தினைப்புனத்தின்கண் கிளி முதலிய வற்றை ஓட்டுதற்குப் பாடும் பாடலின் ஓசையும்,
நறவுக் கண் உடைத்த குறவர் ஓதையும் - தேன் கூட்டின் இடத்தை உடைத்திட்ட குறவர்களின்
முழக்கமும், பறை இசை அருவிப் பயங்கெழும் ஓதையும் - பறையின் முழக்கம் போலும் அருவி
யின் பயன் பொருந்தும் ஒலியும், புலியொடு பொரூஉம் புகர் முக ஓதையும் - புலியுடனே போர்
செய்யும் யானையின் முழக்க மும், கலி கெழு மீ மிசைச் சேணோன் ஓதையும் - தழைத்தல்
பொருந்திய மரத்தின்மீது கட்டிய பரண்மேலுள்ளோன் விலங்கு களைத் துரக்கும் ஓசையும்,
பயம்பில் வீழ் யானைப் பாகர் ஓதை யும் - குழியில் வீழ்ந்த யானையைப் பிடிக்கும் யானைப்பாகரது
ஒலியும், இயங்கு படை அரவமோடு யாங்கணும் ஒலிப்ப-படை யின் இயக்கத்தால் உண்டாய ஒலியோடு
கூடி மலையின் எவ்வி டத்தும் ஒலியாநிற்க;
வேலன் - படிமத்தான் ; முருகனைப் பூசிப்பவன்
; முருகன் வேலை உடைமையால் இவனுக்கு இப் பெயர் எய்திற்று. வள்ளை - உலக் கைப்பாட்டு.
விளி - பாட்டு ; 1 "விளியாதான்
கூத்தாட்டுக் காண்ட லும்" என வருதல் காண்க. நறவு - ஈண்டுத் தேன்கூடு ; கண் - அசையுமாம்.
பிற சான்றோரும் 2"பறையிசை யருவி"
3"பறைக்
குர லருவி" எனக் கூறுதல் காண்க. புகர் முகம் - புள்ளிகள் பொருந்திய முகத்தையுடையது ;
யானை. கலி -ஆரவாரமுமாம் ; 4
"கலிகெழு மரமிசைச் சேணோன்" என்பது காண்க. பயம்பு - யானையை அகப்படுக்கும் குழி. இயங்குபடையரவம்
- ஆகோள் கருதிய வெட்சியாரது படையியங்கும் ஒலி ; 5"படையியங்
கரவம்" என்றார் தொல்காப்பியனாரும்.
|
1
திரிக. 11. 2 புறம். 125 : 228
3 பதிற் 70.
4 குறிஞ்சிப். 40 5
தொல், பொருள். 58.
|
|