2. காட்சிக் காதை



35
அளந்துகடை யறியா அருங்கலம் சுமந்து
வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றத்து
இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது

திறைசுமந்து நிற்கும் தெவ்வர் போல


33
உரை
36

       அளந்து கடையறியா அருங்கலம் சுமந்து - அளவிட்டு முடிவு போகாத அரிய கலன்களைத் தாங்கி வந்து, வளம் தலை மயங்கிய வஞ்சி முற்றத்து - பல செல்வமும் தலைமயங்கிக் கிடக் கின்ற வஞ்சி நகரின் கோயில் முற்றத்தே, இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது திறை சுமந்து நிற்கும் தெவ்வர் போல - அரசனது காணுஞ் செவ்வியைப் பெறாது தாம் கொணர்ந்த திறைப் பொருளினைச் சுமந்து எவ்விடத்தும் நிற்கும் பகைவ ரைப்போல ;

       அளந்து கடையறியா என்றது கலத்தின் மிகுதி கூறியவாறு. சுமந்து வந்து என ஒரு சொல் விரிக்க ; சுமந்து தலைமயங்கிய என முற்றத்திற்கு அடையாக்கலுமாம். தலைமயங்குதல் - விரவிக் கிடத் தல். செவ்வி - காண்டற்கினிய பொழுது. செவ்வி பெறாது யாங் கணும் நிற்குமென்க.