|
Untitled Document
65 |
மண்களி நெடுவேல் மன்னவற்
கண்டு
கண்களி மயக்கத்துக் காதலோ டிருந்த
தண்டமி ழாசான் சாத்தனிஃ துரைக்கும் |
|
மண்
களி நெடு வேல் மன்னவற் கண்டு - நிலமகள் களிப்பெய்துதற்குக் காரணமாகிய நீண்ட வேற்படையினை
யுடைய செங்குட்டுவனை நோக்கி, கண் களி மயக்கத்துக் காத லோடு இருந்த - அவனது காட்சி
கண் களித்தற்குக் காரணமான வியப்பைச் செய்தலால் ஆர்வத்துடன் அவணிருந்த, தண்டமிழ்
ஆசான் சாத்தன் இஃது உரைக்கும் - தமிழ் ஆசிரியனாகிய கூல வாணிகன் சாத்தன் இதனைக்
கூறுவான் ;
மயக்கம்
- மருட்சி; வியப்பு. இஃதென்றது மேல் வருவதனை. |
|