|
Untitled Document
|
ஒண்டொடி மாதர்க் குற்றதை
யெல்லாம்
திண்டிறல் வேந்தே செப்பக் கேளாய் |
|
ஒண்
தொடி மாதர்க்கு உற்றதை எல்லாம் திண் திறல் வேந்தே செப்பக் கேளாய் - ஒள்ளிய வளையலணிந்த
அம் மடந் தைக்கு நேர்ந்தன யாவற்றையும் மிக்க வலியினையுடைய மன் னனே யான் கூறக் கேட்பாயாக
;
அம்
மாதர்க்கு எனச் சுட்டு வருவித்துரைக்க. உற்றதை எல் லாம், ஒருமைப் பன்மை மயக்கம்,
மாதர்க்கு உற்றதை யெல்லாம் செப்பக் கேளாய் என்று சாத்தன் இஃது உரைக்கும் என முன்னர்க்
கூட்டி யுரைப்பினுமமையும். இதற்கு என்று என ஒரு சொல் வரு விக்க. |
|