|
Untitled Document
70
75
|
தீவினைச் சிலம்பு காரண
மாக
ஆய்தொடி அரிவை கணவற் குற்றதும்
வலம்படு தானை மன்னன் முன்னர்ச்
சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும்
செஞ்சிலம் பெறிந்து தேவி முன்னர்
வஞ்சினம் சாற்றிய மாபெரும் பத்தினி
அஞ்சி லோதி அறிகெனப் பெயர்ந்து
முதிரா முலைமுகத் தெழுந்த தீயின்
மதுரை மூதூர் மாநகர் சுட்டதும் |
|
தீ
வினைச் சிலம்பு காரணமாக - இவர் கொடுவினை பலித்தற்குக் காரணமான சிலம்பு ஏதுவாக,
ஆய் தொடி அரிவை கணவற்கு உற்றதும் - ஆராய்ந்த வளையலணிந்த கண்ணகியின் கணவனுக்குநேர்ந்ததனையும்,
வலம்படு தானை மன்னன்முன்னர்- வெற்றியுண்டாதற்குக் காரணமான படையினையுடைய பாண்டி யன்
முன்னர், சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும் - தன் மற்றைச் சிலம்பொன்றுடன் போன
கண்ணகி வழக்குரைத்த தனையும், செஞ்சிலம்பு எறிந்து தேவி முன்னர் வஞ்சினம் சாற் றிய
மா பெரும் பத்தினி - செம்மையுடைய சிலம்பினை உடைத் துப் பாண்டியன் தேவி முன்பு வஞ்சினங்
கூறிய மிக்க பெருமை யினையுடைய பத்தினியாகிய கண்ணகி, அஞ்சில் ஓதி அறிகெனப் பெயர்ந்து
- அழகிய சிலவாய கூந்தலை உடையாய் என் வஞ்சி னத்தை அறிவாயாகவென்று கூறி அவ்விடத்தை
நீங்கி, முதிரா முலை முகத்து எழுந்த தீயின் மதுரை மூதூர் மா நகர் சுட்டதும்- முற்றாத முலையிடத்தே
தோன்றிய எரியான் மதுரையாகிய பழைய நகரினை எரித்ததனையும் சொல்லி;
இனி, சிலம்பு தீவினையுடைத் தன்றாயினும்
இச் செயல்களுக் கெல்லாம் காரணமாக இருந்தது பற்றித் 'தீவினைச் சிலம்பு' என் றார்
எனலும் அமையும். பதிகத்துள்ளும் 1"சிலம்பு காரணமாக"
என்றமை காண்க. கணவற்குற்றது என்றது அவன் கொலையுண்ட தனை. மாணிக்கப் பரலுடையதாகலின்
'செஞ்சிலம்பு' எனப்பட்டது. தேவி முன்னர் வஞ்சினஞ் சாற்றியதனை வஞ்சின மாலையுட் காண்க.
சொல்லியென ஒரு சொல் விரித்துரைக்க.
|
1
சிலப். பதி : 58.
|
|