|
|
அறைபறை யெழுந்தபின்
அரிமா னேந்திய
முறைமுதற் கட்டில் இறைமக னேற |
|
அறை
பறை எழுந்தபின் அரிமான் ஏந்திய முறை முதற் கட்டில் இறைமகன் ஏற - எம் மன்னவனாகிய
குட்டுவர் பெருந் தகை பத்தினிக் கடவுளின் படிவந் தீட்டுதற்குக் கற்கொணரும் பொருட்டு
வடதிசைக்குப் புறப்படுகின்றான் என்று ஒலிக்கின்ற பறையறையப்பட்ட பின்னர் அரியேற்றினாற்
சுமக்கப்பட்டுத் தொன்றுதொட்டுள்ள அரசு கட்டிலில் அரசன் ஏறுதலும் ;
முறை
முதல் - தன் குலத்திற்கு அடிநாள் தொடங்கி உரியதாம் முறைமையுடைய வென்க. |
|