3,கால்கோள் காதை5
ஆசான் பெருங்கணி அருந்திற லமைச்சர்
தானைத் தலைவர் தம்மொடு குழீஇ
மன்னர் மன்னன் வாழ்கென் றேத்தி

முன்னிய திசையின் முறைமொழி கேட்ப


3
உரை
6

       ஆசான் பெருங்கணி அருந்திறல் அமைச்சர் தானைத் தலைவர் தம்மொடு குழீஇ - சேனைத் தலைவர்களுடன் புரோகித னும், பெரு நிமித்திகனும், அரிய வலியுடைய அமைச்சர்களும் கூடி, மன்னர் மன்னன் வாழ்க என்று ஏத்தி - அரசர்க்கரசே வாழ்வாயாக என்று துதித்து, முன்னிய திசையின் முறைமொழி கேட்ப - கருதிய திசையில் நின்று அரசன் கூறும் மொழிகளை முறைமையாற் கேட்க ;

       கணி - நிமித்திகன் ; சோதிடன். "ஆசான் - புரோகிதன் ; பெருங்கணி - கணிதவிவர்த்தகன்" என்பர் அரும்பதவுரையாசிரியர். ஆசான் பெருங்கணி யென்னும் இத் தொடர் இவ்வாறே இந்நூலின் கண் முன்ன1ரோரிடத்தும், பின்னர்2 ஓரிடத்தும் அமைந்துளதேனும், இக்காதையிற் பின் வேறு கூறப்பட்டிருத்தலின், ஆசானாகிய பெருங் கணி எனப் பொருள் கோடல் சாலாதென்க.


1 சிலப். 22 : 8  2 சிலப் 28 : 222.