3,கால்கோள் காதை70
நாடக மடந்தையர் ஆடரங் கியாங்கணும்
கூடையிற் பொலிந்து கொற்ற வேந்தே
வாகை தும்பை மணித்தோட்டுப் போந்தையோடு

ஓடை யானையின் உயர்முகத் தோங்க
வெண்குடை நீழலெம் வெள்வளை கவரும்
கண்களி கொள்ளுங் காட்சியை யாகென


68
உரை
73

       நாடக மடந்தையர் ஆடரங்கு யாங்கணும் கூடை யிற் பொலிந்து - நாடகமகளிர் ஆடுகின்ற அரங்குகள் எங்கும் கூப்பிய கையுடன் விளங்கி, கொற்ற வேந்தே - வென்றி வேந்தே, வாகை தும்பை மணித் தோட்டுப் போந்தையோடு - வாகையும் தும்பையும் மணிபோலும் இதழினையுடைய பனம் பூவினுடன் தொடுக்கப்பட்டு, ஓடை யானையின் உயர்முகத்து ஓங்க - நெற்றிப்பட்ட மணிந்த நின் களிற்றின் உயரிய முகத்தில் ஓங்கித் தோன்ற, வெண்குடை நீழல் எம் வெள்வளை கவரும் - வெண்கொற்றக் குடைநீழலில் எம்முடைய வெள்ளிய வளை களைக் கவரும். கண் களிகொள்ளும் காட்சியை ஆக என - எம் கண்கள் உவகை கொள்ளும் காட்சி யுடையையாக என்று வாழ்த்த;

      
கூடை - அவினயக் கைவகை; இரட்டை ஒற்றைக் கையாகிய கூப்பிய கை; "1கூடை செய்தகை வாரத்துக் களைதலும்' என்புழி உரைத்தமை காண்க. அரசர் சூடுவன யானைக்குஞ் சூட்டுதலின் வாகையும் தும்பையும் போந்தையோடு யானைமுகத் தோங்க என் றார். யானைமீது குடைநிழலில் எம் வளை கவரும் காடைசியையுடையை யாக என்றாரென்க. கவர்ந்து என்பதும் பாடம்.


1 சிலப். 3: 20.