|
Untitled Document
75 |
மாகதப் புலவரும் வைதா
ளிகரும்
சூதரும் நல்வலந் தோன்ற வாழ்த்த
யானை வீரரும் இவுளித் தலைவரும்
வாய்வாண் மறவரும் வாள்வல னேத்தத்
தானவர் தம்மேற் றம்பதி நீங்கும்
வானவன் போல வஞ்சி நீங்கித |
|
மாகதப்
புலவரும் வைதாளிகரும் சூதரும் நல்வலம் தோன்ற வாழ்த்த - சூதரும் மாகதரும் வேதாளிகரும்
நல்ல வெற்றி விளங்குமாறு வாழ்த்த, யானை வீரரும் இவுளித் தலை வரும் வாய்வாள் மறவரும்
வாள் வலன் ஏத்த - யானை மறவரும் குதிரை வீரரும் கூரிய வாட் படையினையுடைய போர் வீரரும்
வாளின் வென்றியை வாழ்த்த, தானவர் தம்மேல் தம்பதி நீங் கும் வானவன் போல வஞ்சி
நீங்கி - அவுணர்மீது தம் பதியின் நீங்கிச் செல்லும் இந்திரனைப்போல வஞ்சிப் பதியினின்றும்
நீங்கி;
மாகதப்
புலவர் - இருந்தேத்துவார்; வைதாளிகர் - வைதாளி யாடுவார்; சூதர்-நின்றேத்துவார்; 1"சூதர்
மாகதர் வேதாளிக ரொடு; என் முன் வந்தமையுங் காண்க. வாய்வாள் - தப்பாத வாளுமாம்.
தானவர்மேல் எடுத்துச் செல்லுமென்க.
|
1
சிலப். 5: 48
|
|