3,கால்கோள் காதை

80





85





90
தண்டத் தலைவருந் தலைத்தார்ச் சேனையும்

வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத
மலைமுதுகு நெளிய நிலைநா டதர்பட
உலக மன்னவன் ஒருங்குடன் சென்றாங்கு
ஆலும் புரவி யணித்தேர்த் தானையொடு
நீல கிரியின் நெடும்புறத் திறுத்தாங்கு

ஆடியல் யானையும் தேரும் மாவும்
பீடுகெழு மறவரும் பிறழாக் காப்பிற்
பாடி யிருக்கைப் பகல்வெய் யோன்றன்
இருநில மடந்தைக்குத் திருவடி யளித்தாங்கு
அருந்திறல் மாக்கள் அடியீ டேத்தப்

பெரும்பே ரமளி ஏறிய பின்னர


80
உரை
91

       தண்டத் தலைவரும் தலைத்தார்ச் சேனையும்-தானைத் தலைவரும் முதன்மை பொருந்திய தூசிப்படையும், வெண்டலைப் புணரியின் விளிம்பு சூழ்போத- வெள்ளிய அலைகளையுடைய கடற்கரைக்கு அருகே போத, மலைமுதுகு நெளிய நிலைநாடு அதர் பட-மலைகளின் முதுகு நெளியவும் சமநிலையுடைய காடுநாடெல் லாம் வழியுண்டாகவும், உலக மன்னவன் ஒருங்கு உடன் சென் றாங்கு - உலகினையாளும் சேரர் பெருமான் ஒரு சேரச் சென்று ஆலும்புரவி அணித் தேர்த் தானையொடு - ஆடுகின்ற குதிரைகள் பூட்டிய அழகிய தேர்ச்சேனையுடன், நீலகிரியின் நெடும்புறத்து இறுத்தாங்கு - நீலவெற்பின் பெரிய புறத்தே தங்கி, ஆடுஇயல் யானையும் தேரும் மாவும் - வென்றி பொருந்திய யானையும் தேரும் குதிரையும், பீடுகெழு மறவரும் பிறழாக் காப்பில் பாடி யிருக்கை - பெருமை மிக்க வீரரும் சூழ்ந்து வேற்றிடஞ் செல்லாத அருங்காப்பினையுடைய படை வீட்டில், பகல்வெய்யோன் தன் இருநில மடந்தைக்குத் திருவடியளித்தாங்கு - நடுவு நிலையை விரும்பும் வேந்தன் தான் ஆளும் நிலமகளுக்குத் தன் திருவடியை அளித்து, அருந்திறல் மாக்கள் அடியீடு ஏத்த-அரிய வலியுடைய மறவர்கள் அடியிட்டு நடத்தலைப் போற்ற, பெரும் பேரமளி ஏறிய பின்னர் - பெருமை பொருந்திய அமளியின் கண் ஏறியபின் ;

      
தண்டலைத்தலைவர் என்பதும் பாடம். தார் - தூசிப் படை ; தாராகிய சேனையென்க. புணரியின் விளிம்பு என்றமையால் குட கடலின் மருங்கே தானை சென்ற தென்பது போதரும். மலை முதுகு நெளிய வென்றது உயர்வு நவிற்சி. ஆலும் - கனைக்கும் என்றுமாம். நீலகிரி - இஞ்ஞான்றும் இப்பெயருடன் விளங்கும் தோற்றஞ் சால் மலை. அதர் - வழி. ஆடு - வெற்றி. பாடி - படைவிட்டிருக்குமிடம் ; பாடியாகிய இருக்கை யென்க. பகல் - நடுவுநிலை ; வெய்யோன் - விரும்புவோன் ; இனி "ஞாயிற்றன்ன வெந்திற லாண்மை" யுடைய னென்றுமாம். யானையினிழிந்து கால்நிலந் தோயச் செய்தனன் என்பார் 'இருநில மடந்தைக்குத் திருவடி யளித்து' என்றார். அடியீடு- அடியிட்டு நடக்கை. ஆங்கு என்பன அசைகள். மன்னவன் விளிம்பு சூழ்போத நெளியவும் அதர்படவும் சென்று தானையொடு இறுத்து இருக்கைக்கண் திருவடியளித்து அமளியேறிய பின்ன ரென்க.