|
|
தாழ்தரு கோலத்துத்
தமரொடு சிறந்து
வாள்வினை முடித்து மறவாள் வேந்தன்
ஊழி வாழியென் றோவர் தோன்றக் |
|
தாழ்தரு
கோலத்துத் தமரொடு சிறந்து - பொருந்திய கோலத்தையுடைய தம் மகளிருடன் மகிழ்ச்சி
மிக்கு வாள்வினை முடித்த மறவாள் வேந்தன் ஊழி வாழியர் என்று ஓவர் தோன்ற - போர்த்
தொழிலினை முடித்து வென்றி வாளினை யுடைய மன்னவன் ஊழியூழி வாழ்வானாக என்று கூறிக் கொண்டு
ஓவர்கள் தோன்ற ;
தாழ்தல் - தங்குதல் ; பொருந்துதல். தமர்
- மகளிர். வாள்வினை - போர்த் தொழில். ஓவர் - ஏத்தாளர். ஓவர் வேந்தன் வாழியர்
என்று தமரொடு தோன்ற வென்க. |
|