3,கால்கோள் காதை

125 கூத்துள் படுவோன் காட்டிய முறைமையின்

ஏத்தின ரறியா இருங்கலன் நல்கி
வேத்தினம் நடுக்கும் வேலோன் இருந்துழி125
உரை
127

       கூத்துள் படுவோன் காட்டிய முறைமையின்-ஆடலாசிரியன் காட்டிய முறைப்படி, ஏத்தினர் அறியா இருங்கலன் நல்கி - தம்மைப் புகழ்ந்து பாடினோர்க்கு அன்னோர் முன்னறி யாத பேரணிகளைக் கொடுத்து, வேத்தினம் நடுக்கும் வேலோன் இருந்துழி - அரசர் கூட்டத்தினை நடுங்கச் செய்யும் வேற்படை யினையுடைய மன்னவன் இருந்தபொழுது ;

       கூத்துள் படுவோன் - தன்னிடத்துள்ள ஆடலாசிரியன் ; காட்டிய முறைமையின் - அவன் அறிவித்த வரிசைக்குத் தக. ஏத்தினர் அறியா விருங்கலன் என்பதனை 1 "விரற்செறி மரபின செவித்தொடக்குநரும், செவித்தொடர் மரபின விரற்செறிக்குநரும், அரைக்கமை மரபின மிடற்றியாக்குநரும், மிடற்றமை மரபின வரைக்கி யாக்குநரும்" என்பதனானறிக.


1 புறம். 377.