|
|
நாடக மகளிரும் நலத்தகு
மாக்களும்
கூடிசைக் குயிலுவக் கருவி யாளரும்
சஞ்சயன் றன்னொடு வருக ஈங்கெனச |
|
நாடக
மகளிரும் நலத்தகு மாக்களும் கூடிசைக் குயிலுவக் கருவியாளரும் - நாடக மாதரும் சிறப்புடைய
ஏனையரும் குயிலுவரும், சஞ்சயன் தன்னொடு வருக ஈங்கு என - சஞ்சயனோடும் ஈண்டு வருக என
அரசன் பணிப்ப ;
யானை முதலியன புறத்தே நிற்க மக்களாவாரை
அழைத்து வருகவென ஆணை செய்தனனென்க. |
|