3,கால்கோள் காதை

170

சஞ்சயன் போனபின் கஞ்சுக மாக்கள்
எஞ்சா நாவினர் ஈரைஞ் ஞூற்றுவர்
சந்தின் குப்பையுந் தாழ்நீர் முத்தும்
தென்ன ரிட்ட திறையொடு கொணர்ந்து
கண்ணெழுத் தாளர் காவல் வேந்தன்

மண்ணுடை முடங்கலம் மன்னவர்க் களித்தாங்கு
ஆங்கவ ரேகிய பின்னர் மன்னிய166
உரை
172

       கஞ்சுகமாக்கள் எஞ்சா நாவினர் ஈரைஞ்ஞூற்று வர் - மொழிதவறாத நாவினையுடையரான கஞ்சுகமாக்கள் ஆயி ரவர், சந்தின் குப்பையும் தாழ்நீர் முத்தும் தென்னர் இட்ட திறையொடு கொணர்ந்து - சந்தனக் குவியலும் நீர்மை தங்கிய முத்தும் பாண்டியர் இட்ட திறைப் பொருளுடன் கொண்டுவர, கண்ணெழுத்தாளர் - திருமுகமெழுதுவோர், காவல் வேந்தன் - மாநிலங் காவலனாகிய மன்னவனது, மண்ணுடை முடங்கல் - இலச்சினையிடப்பட்ட திருமுகத்தினை, அம் மன்னவர்க்கு அளித்து - அவ்வரசர்க்கு அளிக்க, ஆங்கவர் ஏகிய பின்னர் - அவர் அது கொண்டு போயபின்;

       எஞ்சாமை - சோர்வின்மையுமாம். தென்னர் விடுத்த கஞ்சுக மாக்கள் ஈரைஞ்ஞூற்றுவ ரென்க. தாழ்நீர் - கடலுமாம். சந்தும் முத்துமாகிய தென்னரிட்ட திறையெனக் கொண்டு ஓடுவை அசை யாக்கலுமாம். சந்தனமும் முத்தும் தென்னர்க்குரியன வாதல் 1 "தன்கடற் பிறந்த முத்தினாரமும், ... சந்தினாரமும், இருபே ரார மும் எழில்பெற வணியும், திருவீழ்மார்பிற் றென்னவன்" "2"கோவா மலையாரங் கோத்த கடலாரம், ... தென்னர்கோன் மார்பினவே" என்பவற்றா னறியப்படும். கண்ணெழுத்தாளர் - ஈண்டுத் திருமுக மெழுதுவார். முடங்கல் - திருமுகம். வேந்தன் முடங்கலை அம் மன்னவர்க்குக் கண்ணெழுத்தாளர் எழுதி இலச்சினையிட்டு அவர் கைக் கொடுத்தாரென்க. கொணர்ந்து அளித்து என்பவற்றைக் கொணர அளிப்பவெனத் திரிக்க. ஆங்கு, அசை.

1 அகம். 13. 2 சிலப். 17. உள்வரி-1.