|
175
180 |
ஆங்கவ ரேகிய பின்னர்
மன்னிய
வீங்குநீர் ஞாலம் ஆள்வோ னோங்கிய
நாடாள் செல்வர் நலவல னேத்தப்
பாடி யிருக்கை நீங்கிப் பெயர்ந்து
கங்கைப்பே ரியாற்றுக் கன்னரிற் பெற்ற
வங்கப் பரப்பின் வடமருங் கெய்தி
ஆங்கவ ரெதிர்கொள அந்நாடு கழிந்தாங்கு
ஓங்குநீர் வேலி உத்தர மரீஇப்
பகைப்புலம் புக்குப் பாசறை யிருந்த
தகைப்பருந் தானை மறவோன் றன்முன |
|
மன்னிய
வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் - நிலை பெற்ற கடல் சூழ்ந்த வுளகினையாளும் செங்குட்டுவன்,
ஓங்கிய நாடு ஆள் செல்வர் நல் வலன் ஏத்த-பெருமை பொருந்திய நாட் டினையாளும் அரசர்கள்
தனது சிறந்த வென்றியைக் கொண் டாட, பாடியிருக்கை நீங்கிப் பெயர்ந்து-பாடியாகிய இருக்கையி
னின்றும் நீங்கிப் புறப்பட்டு, கங்கைப் பேரியாற்றுக் கன்னரிற் பெற்ற வங்கப் பரப்பின்
வடமருங்கு எய்தி - நூற்றுவர் கன்னரிடம் பெற்ற மரக்கலத் திரள்களான் கங்கைப் பெருநதி
யின் வடகரையை அடைந்து, ஆங்கவர் எதிர்கொள அந்நாடு கழிந்தாங்கு - கன்னர் எதிர்கொண்டழைக்க
அவர் நாட்டினைக் கடந்து, ஓங்குநீர் வேலி உத்தரம் மரீஇ - கடலை வேலியாக வுடைய வடதேயத்தை
யடைந்து, பகைப் புலம் புக்குப் பாசறை இருந்த - பகையரசர் நாட்டில் நுழைந்து படைவீட்டிலிருந்த,
தகைப்பருந் தானை மறவோன் தன்முன்- தடுத்தற்கரிய சேனை களையுடைய விறலோன் முன்னர்;
இருந்தனன் அங்ஙனமிருந்த மறவோன்றன்முன்
என்க. ஆள் வோன் பெயர்ந்து எய்திக் கழிந்து மரீஇப் புக்கு இருந்தனன் என முடிக்க.
|
|