|
Untitled Document
190
195
|
இரைதேர் வேட்டத் தெழுந்த
வரிமாக்
கரிமாப் பெருநிரை கண்டுளஞ் சிறந்து
பாய்ந்த பண்பிற் பல்வேன் மன்னர்
காஞ்சித் தானையொடு காவலன் மலைப்ப
வெயிற்கதிர் விழுங்கிய துகிற்கொடிப் பந்தர்
வடித்தோற் கொடும்பறை வால்வளை நெடுவயிர்
இடிக்குரல் முரசம் இழுமென் பாண்டில்
உயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
மயிர்க்கண் முரசமொடு மாதிரம் அதிரச |
|
இரை
தேர் வேட்டத்து எழுந்த அரிமா - உணவு தேடி வேட்டைக்குப் புறப்பட்ட சிங்கம், கரிமாப்
பெருநிரை கண்டு உளம் சிறந்து பாய்ந்த பண்பில் - பெருங் கூட்டமாகிய யானைகளைக் கண்டு
ஊக்கமிக்கு அவற்றின்மேற் பாய்ந்தாற் போல, பல்வேல் மன்னர் காஞ்சித் தானையொடு
காவலன் மலைப்ப - வேற்படையினை யுடைய பல அரசர்களின் எதிரூன் றிய சேனையுடன் செங்குட்டுவன்
போர்புரியத் தொடங்கி, வெயிற் கதிர் விழுங்கிய துகிற்கொடிப் பந்தர் - ஞாயிற்றின்
கதிர்களை மறைத்த துகிற்கொடிகளாகிய பந்தரில், வடித்தோற் கொடும்பறை - தெளித்தெடுத்த
தோலினால் மூடப்பட்ட கொடும்பறை, வால்வளை-வெள்ளிய சங்கு, நெடுவயிர் - நீண்ட கொம்பு,
இடிக்குரன் முரசம்-இடிபோலும் ஒலியுடைய முழவு, இழுமென் பாண்டில் - இழுமென்னும் ஓசையுடைய
கஞ்ச தாளம், உயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரல் முழக்கத்து மயிர்க் கண் முரசமொடு - இடிமுழக்கம்
போலும் பேரொலியுடன் உயிர்ப்பலி கொள்ளும் மயிர்க்கண் முரசம் என்னுமிவற்றுடன், மாதிரம்
அதிர - திசைகள் அதிர;
அரிமா, கரிமா என்பன இருபெயரொட்டு. உளம்
- ஊக்கம்; 1 "உள்ளத்தனைய துயர்வு"
என்புழி இப்பொருட்டாதல் காண்க. விழுங்குதல் - மறைத்தல்; இலக்கணை. வடித்தோல் -
பதனிட்ட தோல். முழக்கத்தையுடைய முரசமென்றுமாம். மயிர்க்கண் முர சம் - மயிர் சீவாத
தோல் போர்த்த கண்ணையுடைய முரசம்; முன்ன ரும் 2
"உயிர்ப்பலியுண்ணு முருமுக்குரன் முழக்கத்து, மயிர்க்கண் முரசு" என்றார்; ஆண்டு உரைத்தமையுங்
காண்க. பறை முதலி யன அதிர மாதிரமும் அதிர்ந்ததென்க; பறை முதலியன முரச மொடு மாதிரமெல்லாம்
ஒலிக்க எனலுமாம்.
|
1
குறள், 595. 2
சிலப். 5; 87-8.
|
|