|
205 |
தோளுந் தலையுந் துணிந்துவே
றாகிய
சிலைத்தோண் மறவர் உடற்பொறை யடுக்கத்து
எறிபிணம் இடறிய குறையுடற் கவந்தம்
பறைக்கட் பேய்மகள் பாணிக் காடப் |
|
தோளும்
தலையும் துணிந்து வேறாகிய - தோள்களும் தலையும் துணிபட்டு வெவ்வேறாகிய, சிலைத்தோள்
மறவர் உடற் பொறை அடுக்கத்து - வில்லைத் தோளிற் கொண்ட வீரர்களின் உடற்பாரமாகிய
குன்றுகளில், எறி பிணம் இடறிய குறை உடற் கவந்தம் - வெட்டுண்ட பிணத்தால் இடறப்பட்ட
தலை யற்ற உடலினையுடைய கவந்தங்கள், பறைக்கண் பேய் மகள் பாணிக்கு ஆட - பறைபோன்ற
பெரிய கண்களையுடைய பேய் மகளின் தாளத்திற்கிசைய ஆட;
பறைபோலுங்
கண்ணென்பதனைப் 1 "பேய்க்க ணன்ன
பிளிறு கடி முரசம்" என்பதனானு மறிக. |
1
பட்டினப். 236.
|
|