3,கால்கோள் காதை


210
பிணஞ்சுமந் தொழுகிய நிணம்படு குருதியில்
கணங்கொள் பேய்மகள் கதுப்பிகுத் தாட



209
உரை
210

       பிணம் சுமந்து ஒழுகிய நிணம்படு குருதியில்-பிணங் களை ஈர்த்து ஓடும் நிணம் பொருந்திய குருதியாற்றில், கணம் கொள் பேய்மகள் கதுப்பு இகுத்து ஆட-பெண்பேயின் கூட் டம் கூந்தலைத் தாழவிட்டு ஆட;

       1 "கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇப், பிணந்தின் யாக்கைப் பேய்மகள் துவன்றவும்" என்பது ஈண்டு அறியற்பாலது.


1  புறம். 18.