|
|
வாய்வா ளாண்மையின்
வண்டமி ழிகழ்ந்த
காய்வேற் றடக்கைக் கனகனும் விசயனும்
ஐம்பத் திருவர் கடுந்தே ராளரொடு
செங்குட் டுவன்றன் சினவலைப் படுதலும |
|
வாய்வாளாண்மையின்
வண்டமிழ் இகழ்ந்த-வாய் வறிதே இராமையால் வண்டமிழை இகழ்ந்துரைத்த, காய்வேல் தடக்கைக்
கனகனும் விசயனும் - கொதிக்கும் வேலினை யேந் திய பெரிய கைகளையுடைய கனகனும் விசயனும்,
ஐம்பத்திரு வர் கடுந்தேராளரொடும் - கடிய செலவினையுடைய தேர்வல் லார் ஐம்பத்திருவருடனும்,
செங்குட்டுவன்தன் சினவலைப் படு தலும் - செங்குட்டுவ மன்னனின் சினமாகிய வலையின் கண்ணே
அகப்படுதலும்;
வாய்வாளாண்மை
- வாயாகிய வாளின் ஆண்மை; வாய் வீரம். வாய்வாளாமை யென்பது ஒன்றும் பேசாதிருத்தலாகலின்
இச்சொல் அதனின் வேறாமென்க; 1
"வாய்வாளாமை ... மாற்ற முரையா திருத்தல்" என்பது காண்க. பற்றுக்கோட் பட்டா ரென்பது
சின வலைப்படுதலென்பதனாற் பெற்றாம்.
|
1 மணி.
30: 247--9.
|
|