|
225
230
|
சடையினர் உடையினர்
சாம்பற் பூச்சினர்
பீடிகைப் பீலிப் பெருநோன் பாளர்
பாடு பாணியர் பல்லியத் தோளினர்
ஆடு கூத்த ராகி யெங்கணும்
ஏந்துவா ளொழியத் தாந்துறை போகிய
விச்சைக் கோலத்து வேண்டுவயிற் படர்தரக |
|
சடையினர்
உடையினர் சாம்பற் பூச்சினர் - சடை யும் காவியுடையும் சாம்பற்பூச்சுமுடைய துறவிகளாகியும்,
பீடிகைப் பீலிப் பெருநோன்பாளர் - மணையும் மயிற்றோகையு முடைய பெரிய விரதியராகியும்,
பாடுபாணியர் பல்லியத்தோ ளினர் ஆடு கூத்தராகி - பாடுகின்ற பாட்டினையுடையரும் பல வாச்சியங்களையிட்டுச்
சுருக்கிய பையைத் தோளிலுடையரு மாகிய ஆடுங் கூத்தராகியும், எங்கணும் ஏந்து வாள் ஒழிய-ஏந்
திய வாட்படைகள் எவ்விடத்தும் ஒழிந்து கிடக்க, தாம் துறை போகிய விச்சைக் கோலத்து
வேண்டுவயிற் படர்தர - மற்றும் தாம் கற்றுவல்ல வித்தைகட்குரிய கோலங்களுடையராகியும்
வேண்டுமிடங்களிற் செல்ல;
பீலியுடையார்
சமணராவர். பாடுபாணி - ஒலிக்கின்ற தாளமு மாம். வாளொழியத் துறவிகளாகியும் நோன்பாளராகியும்
கூத்த ராகியும் கோலத்தினராகியும் வேண்டுமிடங்களிற் செல்ல வென்க. ஏனையரசரும் படைஞரும்
படர்தரவென்று வருவித்து முடிக்க. 1
"வரைக்கலிங்கர் தமைச்சேர மாசையேற்றி வன்னூறு பறித்த மயிர்க் குறையும் வாங்கி, அரைக்கலிங்க
முரிப்புண்ட கலிங்கரெல் லாம் அமணரெனப் பிழைத்தாரு மநேக ராங்கே" "குறியாகக் குருதிகொடி
யாடையாகக் கொண்டுடுத்துப் போர்த்துப்பாற் குஞ்சி முண்டித், தறியீரோ சாக்கியரை யுடைகண்டாலெ
னப்புறமென் றியம்பிடுவ ரநேக ராங்கே" என்பன ஈண்டு ஒத்துநோக்கி மகிழ்தற் குரியன. |
1 கலிங்.
போர்பாடியது. 63, 65.
|
|