3,கால்கோள் காதை



250
வடதிசை மருங்கின் மறைகாத் தோம்புநர்,
தடவுத்தீ யவியாத் தண்பெரு வாழ்க்கை
காற்றூ தாளரைப் போற்றிக் காமினென



248
உரை
250

      வடதிசை மருங்கின் மறைகாத்து ஓம்புநர் - வட திசைக்கண்ணே மறையினைப், பாதுகாக்கும் அந்தணருடைய, தடவுத்தீ அவியாத் தண்பெரு வாழ்க்கை - குண்டத்தின் முத் தீயை அவியாது பேணும் பெரிய அருள் வாழ்க்கையை, காற்றூ தாளரைப் போற்றிக் காமின் என - குறிக்கொண்டு காப்பீராக வென்று தூதுவர்க்குச் சொல்லி;

       தடவு - ஓமகுண்டம்; 1 "தடவுநிமிர் முத்தீ" என்பது காண்க. காமினெனச் சொல்லி என ஒரு சொல் விரித்துரைக்க. ஓம்புநர் வாழ்க்கையைப்போற்றிக் காமினெனக் காற்று தாளர்க்குச் சொல்லி யென மாறுக. தூதாளரை, வேற்றுமை மயக்கம். காற்றூதாளர் - காலாள் என்பதுபோல் நின்றது. 2 "அருமறை யந்தண ராங்குளர் வாழ்வோர், பெருநில மன்ன பேணனின் கடனென்று" முன் விசும் பியங்கு முனிவர் கூறியதை உட்கொண்டு தூதர்க்கு ஆணைதந்தா னென்க.


1 பரிபா. 5-42. 2 சிலப். 26 ; 102-3.