|
20
|
ஆர்புனை தெரியலும் அலர்தார்
வேம்பும்
சீர்கெழு மணிமுடிக் கணிந்தோ ரல்லால்
அஞ்சினர்க் களிக்கும் அடுபோ ரண்ணல்நின்
வஞ்சினத் தெதிரும் மன்னரு முளரோ
இமைய வரம்பநின் இகழ்ந்தோ ரல்லர்
அமைகநின் சினமென ஆசான் கூற |
|
ஆர்புனை
தெரியலும் அலர்தார் வேம்பும் சீர்கெழு மணிமுடிக்கு அணிந்தோர் அல்லால் - ஆத்தி மலராற்
றொடுக் கப்பட்ட கண்ணியையும் வேப்ப மலர் மாலையையும் சிறப்பு மிக்க அழகிய முடியிற்
சூடியோராகிய சோழ பாண்டியரை யன்றி, அஞ்சினர்க்கு அளிக்கும் அடுபோர் அண்ணல் - அஞ்சி
யோர்க்கு அருள்புரியும் போர்த்திறனுடைய அண்ணலே, நின் வஞ்சினத்து எதிரும் மன்னரும்
உளரோ - நினது வஞ்சின மொழிகட்கு எதிராகும் அரசரும் உளரோ, இமைய வரம்ப நின் இகழ்ந்தோர்
அல்லர் - ஆகலான் இமயவரம்பனே அவர்கள் நின்னை இகழ்ந்துரைத்தாரல்லர், அமைக நின்
சினம் என ஆசான் கூற - நின் செற்றந் தணிக என்று புரோகிதன் கூற ;
வேம்பின் அலர்த்தார் என்க. அணிந்தோரை
யல்லால் நின்னை யிகழ்ந்தோரல்லர் எனக் கூட்டுக. நீ வஞ்சினங் கூறுதற்கு நின் னுடன்
எதிர்க்கும் மன்னரு முளரோ என்றுமாம். அஞ்சியோர்க்கு - அஞ்சி யடைந்தோர்க்கு.
|
|