3,கால்கோள் காதை

  மீளா வென்றி வேந்தன் கேட்டு
வாளுங் குடையும் வடதிசைப் பெயர்க்கென


32
உரை
33

       மீளா வென்றி வேந்தன் கேட்டு - நீங்காத வெற்றி பொருந்திய செங்குட்டுவன் அதனைக் கேட்டு, வாளும் குடை யும் வடதிசைப் பெயர்க்க என - நமது வாளையும் குடையையும் வடக்கு நோக்கிப் புறப்பட விடுவீராக என ;

      
வாளும் குடையும் பெயர்த்தல் - வாணாட் கோளும் குடை நாட்கோளுமாம் ; முன் "1குடை நிலை வஞ்சி," என்புழி உரைத்தமை காண்க.


1 சிலப் 25 : 141,