3,கால்கோள் காதை


35

40

45
உரவுமண் சுமந்த அரவுத்தலை பனிப்பப்
பொருந ரார்ப்பொடு முரசெழுந் தொலிப்ப

இரவிடங் கெடுத்த நிரைமணி விளக்கின்
விரவுக்கொடி யடுக்கத்து நிரயத் தானையோடு
ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும்
வெம்பரி யானை வேந்தற் கோங்கிய
கரும வினைஞருங் கணக்கியல் வினைஞரும்

தரும வினைஞருந் தந்திர வினைஞரும்
மண்டிணி ஞாலம் ஆள்வோன் வாழ்கெனப்
பிண்ட முண்ணும் பெருங்களிற் றெருத்தின்
மறமிகு வாளும் மாலைவெண் குடையும்
புறநிலைக் கோட்டப் புரிசையிற் புகுத்திப்

புரைதீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன்
அரைசுவிளங் கவையம் முறையிற் புகுதர


34
உரை
47

       உரவுமண் சுமந்த அரவுத்தலை பனிப்ப - வலிய நிலவுல கினைச் சுமந்துள்ள அனந்தனின் தலை நடுங்குமாறு, பொருநர் ஆர்ப்பொடு முரசு எழுந்து ஒலிப்ப - களம் பாடுவோரின் ஆரவாரத்துடன் முரசம் எழுந்து முழங்க, இரவு இடங் கெடுத்த நிரை மணி விளக்கின் - இருள் இல்லையாமாறு ஓட்டிய வரிசையாகிய மணிவிளக்கொளியில், விரவுக் கொடி அடுக்கத்து நிரையத் தானையோடு - கொடிகள் விரவி நெருங்கிய நிரயம் போலும் சேனைகளுடன், ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும் - அமைச்சர் முதலாய ஐம்பெருங் குழுவினரும் கர ணத்தியலராதி எண்பேராயத்தினரும், வெம்பரி யானை வேந் தற்கு ஓங்கிய கருமவினைஞரும் கணக்கியல் வினைஞரும் - கடுகிய செலவினையுடைய யானையையுடைய அரசற்குச் சிறந்தோராகிய அந்தணரும் காலத்தை அறுதியிடும் கணிகளும், தருமவினை ஞரும் தந்திரவினைஞரும் - அறங்கூறுந் தொழிலோரும் தந்தி ரத் தொழிலோரும், மண்டிணி ஞாலம் ஆள்வோன் வாழ்க என - மண் செறிந்த நிலவுலகினை ஆள்கின்ற எம் மன்னன் வாழ்க என வாழ்த்தி, பிண்டம் உண்ணும் பெருங்களிற்று எருத் தின் - பிண்டத்திற்குரிய பெரிய பட்டத்து யானையின் பிடரின் மீது, மறமிகு வாளும் மாலைவெண் குடையும் புறநிலைக் கோட் டப் புரிசையில் புகுத்தி - வென்றி மிக்க வாளினையும் மாலை யணிந்த வெள்ளிய குடையினையும் வைத்துக் கோயிலின் புற மதிற்கண்ணே புகவிட்டு, புரைதீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன் - குற்றமற்ற வஞ்சி மாலையைப் பனம் பூமாலை யுடன் தொடுத்தணியும் சேரனது, அரைசு விளங்கு அவையம் முறையிற் புகுதர - விளங்கிய அரசவைக்கண்ணே முறைமை யுடன் புகாநிற்க ;

      
பொருநர் - போர்க்களம் பாடும் பொருநர் ; வீரருமாம், நிரை மணி விளக்கின் என்றமையானும், பின் காலை முரசங் கூறுதலானும் வாளுங் குடையும் நாட் கொண்டமையும் பெருஞ் சோறு வகுத்தமை யும் இரவிலென்பது பெற்றாம். நிரயத் தானை - பகைவர்க்கு நரகம் போலும் துன்பத்தைச் செய்யுந் தானை; நரகபாலர் போலும் தானை யென்றுமாம்; 1"நிரைகளி றொழுகிய நிரைய வெள்ளம்" 2"நிரைய வொள்வா ளிளையர் பெருமகன்" என்பனவுங் காண்க. ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும் 3முன்னர் உரைக்கப்பட்டமை காண்க. வெம்பரித் தானை என்பதும் பாடம். கரும வினைஞர் - சடங்கியற்று வோர். தந்திர வினைஞர் - படைத் தலைவர்; கடவுளரை அருச்சிப் போருமாம். பிண்டம் - அரசன் பிண்டித்து னவத்த உணவு; 4"பிண்ட முண்ணும் பெருங் களிறு" என்றார் திருத்தக்கதேவரும். கோட்டப் புறநிலைப் புரிசை என மாறுக. வாளினையும் குடையினை யும் நன் முழுத்தத்திலே புறப்படவிட்டு என்றபடி. வஞ்சி போர்ப் பூவும், போந்தை அடையாளப் பூவுமாம். தானையோடு குழுவும் ஆயமும் கருமவினைஞர் முதலாயினாரும் கூடி வாழ்த்தி வாளும் குடை யும் புகுத்திப் புகுதரவென்க.


1 பதிற். 15 2 குறுந். 258
3 சிலப். 5: 157. 4 சிந். 1844.