|
50
|
அரும்படைத் தானை யமர்வேட்டுக்
கலித்த
பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்துப்
பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி
வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக் கணிந்து |
|
அரும்படைத்
தானை - அரிய படைக்கலங்களையுடைய சேனை மறவர்க்கும், அமர் வேட்டுக் கலித்த பெரும்
படைத் தலைவர்க்கும் - போரை விரும்பித் தருக்கிய பெரிய தானைத் தலை வர்கட்கும்,
பெருஞ்சோறு அளித்து-பெருஞ்சோற்று விருந் தளித்து, பூவா வஞ்சியில் - வஞ்சிமா நகரிலே,
பூத்த வஞ்சி வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக்கு அணிந்து - கூரியவாளினை யுடைய அரசர் பெருந்தகை
வஞ்சிப் பூமாலையைத் தனது அழகிய முடியிற் சூடி;
தானையினையும்
படையினையுமுடைய தலைவர்க்கு என்றுமாம். கலித்த - ஆரவாரித்த எனலுமாம். பெருஞ்சோறு வகுத்தலை
மேல் 1பெருஞ் சோற்று வஞ்சி என்புழி
உரைத்தமையானறிக. பூவா வஞ்சி, வெளிப்படை. பூவா பூத்த என்பன முரண். நெடுந்தகை பெருஞ்சோறு
வகுத்து வஞ்சி யணிந்து என்க.
|
1
சிலப் 25: 144
|
|