|
55
60
|
ஞாலங் காவலர் நாட்டிறை
பயிரும்
காலை முரசம் கடைமுகத் தெழுதலும்
நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி
உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி
மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து
இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு
மறையோ ரேந்திய ஆவுதி நறும்புகை
நறைகெழு மாலையின் நல்லகம் வருத்தக்
கடக்களி யானைப் பிடர்த்தலை யேறினன |
|
ஞாலங்
காவலர் நாள் திறை பயிரும் - ஏனை நாட்டு மன்னர்கள் நாட் காலத்தே இடுந் திறையை அழைக்கும்,
காலை முரசம் கடைமுகத்து எழுதலும் - காலை முரசம் கடைவாயிலில் முழங்குதலும், நிலவுக் கதிர்முடித்த
நீள் இருஞ் சென்னி உலகு பொதி உருவத்து உயர்ந்தோன் சேவடி - ஒளி பொருந்திய திங்
களைச் சூடிய நீண்ட பெரிய சடைமுடியினையும் உலகினையகப் படுத்தும் வடிவத்தினையுமுடைய சிவபெருமான்
திருவடிகளை, மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து - வெற்றி பொருந்திய வஞ்சி மாலையுடன்
அணிந்து, இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு - எவர்க்கும் வணங்காத தலையால்
வணங்கி வலம்வந்து, மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை நறைகெழு மாலையின் நல்லகம் வருத்த
- அந்தணர் ஏந்திவந்த ஆகுதியின் நறிய புகை தேன் மிகுந்த மலர் மாலையின் நல்லவிடத்தை
வருத்த, கடக்களி யானைப் பிடர்த்தலை ஏறினன் - மதக்களிப் பினையுடைய யானையின் பிடரின்கண்
ஏறினன்;
உலகு
பொதி யுருவம் - 1"இருசுடரோ டியமான
னைம்பூத மென், றெட்டு வகையும்" ஆகிய உலகு வடிவாதலன்றி அதனைக் கடந்தும் நிற்கும் நிறைவுநிலை.
இறைஞ்சிப் புனைந்து என்க; 2"குண மிலவே
எண்குணத்தான், தாளை வணங்காத்தலை" என்பதுங் காண்க. சேவடியைப் புனைதலாவது சிந்தனையாற்
சென்னியிலிருத்தல். புகை - அக்கினி கோத்திரம் என்பர். புகையுடன் போந்து மறை யோர்
வாழ்த்த ஏறினன் என்க. மாலையை வருத்தலாவது - வாடச் செய்தல்; புகை மிகுதி கூறியபடி.
|
1
மணி. 27: 89 - 90. 2 குறள். 9,
|
|