4. நீர்ப்படைக் காதை



40

மாற்றருஞ் சிறப்பின் மணிமுடிக் கருந்தலைக்

கூற்றுக்கண் ணோட அரிந்துகளங் கொண்டோர்


39
உரை
40

        மாற்றருஞ் சிறப்பின் மணிமுடிக் கருந்தலை - பெயர்த் தற்கரிய சிறப்பினையுடைய மணிமுடி கவித்த பெரிய தலையினை, கூற்றுக் கண்ணோட அரிந்து களம்கொண்டோர் - கூற்றுவனும் இரக்கங்கொள்ள அறுத்துப் போர்க்களத்தினைத் தமதாக்கிக் கொண்டோரும் ;

        மாறு என்பது மாற்றென விகாரமாயிற் றெனலுமாம் ; மாறு - ஒப்பு. மணிமுடிக் கருந்தலை - மாற்றரசர் தலை. கண்ணோட்ட மின்றி உயிர்வௌவும் கூற்றுவனும் கண்ணோட என்றார் ; சிறப்பும்மை தொக்கது. 1"கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை" என்றார் பிறரும்.


1 புறம். 18.