4. நீர்ப்படைக் காதை


நிறஞ்சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து
புறம்பெற வந்த போர்வாண் மறவர்


41
உரை
42
        நிறம் சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து - உருச் சிதைந்த கவசத்தோடே மார்பின்கண் புண் மிகப்பெற்று, புறம் பெற வந்த போர் வாண் மறவர் - பகைவர் புறத்தைக் கண்ட வளவிலே மீண்ட போரிற் சிறந்த வாள் வீரரும் ;

        நிறம் இரண்டனுள் முன்னது வடிவு ; பின்னது மார்பு.