4. நீர்ப்படைக் காதை




45

வருக தாமென வாகைப் பொலந்தோடு
பெருநா ளமயம் பிறக்கிடக் கொடுத்துத்

தோடார் போந்தை தும்பையொடு முடித்துப்
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தன்
ஆடுகொள் மார்போ டரசுவிளங் கிருக்கையின்


43
உரை
47

        வருக தாம் என - வருகவென்றழைத்து, வாகைப் பொலம்தோடு - பொன்னாலாகிய வாகை மலரினை, பெருநாள் அமயம் பிறக்கிடக் கொடுத்து - பெரிய நாளில் கொடுக்கும் பொழுதொழிய நெடும்பொழுதிருந்து கொடுத்து, தோடுஆர் போந்தை தும்பையொடு முடித்து - இதழ் பொருந்திய பனம்பூ மாலையினைத் தும்பை மாலையோடு சூடி, பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தன்-வீரரைப் பாடும் புறத்துறையெல்லாம் முடித்துப் பாடல்கொண்ட வென்றியினையுடைய மன்னன், ஆடு கொள் மார்போடு அரசு விளங்கு இருக்கையின் - வெற்றி கொண்ட மார்போடே விளங்கி யிருக்கும் அரசிருக்கைக் கண்ணே ;

        மடிந்தோர் மைந்தரும் அணிந்தோரும் பொலிந்த மைந்தரும் கலங்கொண்டோரும் வாண் மறவரும் வருகவென அழைத்துக் கொடுத்தென்க. வாகைப் பொலந்தோடு அளித்தல் வீரர்களின் வீரச் செய்கையைப் பாராட்டியதற்கு அடையாளமாக அளிக்கும் சிறப்பாகும். கொடுக்குநாளைப் பெருநாளென்றார். அமயம் பிறக்கிட-பொழுது போதாதாம்படி. இனி, பிறந்த நாள்வயிற் கொடுக்கும் பொழுது பின்னாகும்படி யென்றுரைத்தலுமாம்.