4. நீர்ப்படைக் காதை




55

பகைப்புலத் தரசர் பலரீங் கறியா
நகைத்திறங் கூறினை நான்மறை யாள

யாதுநீ கூறிய வுரைப்பொரு ளீங்கென


53
உரை
55

        பகைப்புலத்து அரசர் பலர் ஈங்கு அறியா நகைத் திறம் கூறினை - இங்குள்ள பகைப்புலத்து மன்னர் பலரும் அறியாத நகைவகையாகிய கூற்றினைக் கூறினை, நான் மறையாள - அந்தணாளனே, யாது நீ கூறிய உரைப்பொருள் ஈங்கு என - ஈண்டு நீயுரைத்த மொழியின் பொருள் யாதென்று கூற ;

        பகைப்புலம் - பகைவர் நாடு, இப்பொழுது பகைவரெனற் கேலாமையின் 'பகைப்புலத்தரசர்' என்றான், அவன் கூறியதன் கருத்தைத் தான் அறிந்திருப்பினும் பகைப்புலத்தரசர் அறியாராகலின் அவரறியுமாறு கூறுவிக்கக் குருதி, உரைப்பொருள் யாது அதனைத் தெரிவிப்பாய் என்றனனென்க. நானறியாத நகை யென்னாது மன்னர் பலரு மறியாத என்றான், 'இராச பாவத்தாலே' என்பர் அரும்பத வுரையாசிரியர்.