4. நீர்ப்படைக் காதை






65

மாட மூதூர் மதுரை புக்காங்கு
இலைத்தார் வேந்தன் எழில்வான் எய்தக்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
குடவர் கோவே நின்னாடு புகுந்து

வடதிசை மன்னர் மணிமுடி யேறினள்


61
உரை
65

        ஆங்கு இலைத்தார் வேந்தன் எழில் வான் எய்த-அந்நகரிடத்தே தழைவிரவிய மாலையணிந்த பாண்டியன் அழகிய துறக்கத்தினை அடைய, கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி - கொலையுண்ட கோவலன் மனைவியாகிய கண்ணகி, குடவர் கோவே நின்னாடுபுகுந்து-குடநாட்டினர் தலைவனே நின்னாட்டின் கண்புக்கு, வடதிசை மன்னர் மணிமுடி ஏறினள்-வடக்கண் ஆரியவரசரது முடித் தலையி லேறினாள் ;

        வான்எய்த - வானெய்தும்படி ; செயவெனெச்சம் காரியப் பொருட்டு. புகுந்து பின்பு ஏறினாளென்க. வடிவெழுதிய கல்லாகலின் 'ஏறினாள்' என்றான்.