|
15
|
செங்குட் டுவன்றன் சினவேற் றானையொடு
கங்கைப் பேர்யாற்றுக் கரையகம் புகுந்து
பாற்படு மரபிற் பத்தினிக் கடவுளை
நூற்றிறன் மாக்களி னீர்ப்படை செய்து
|
|
தன்
சின வேல் தானையொடு - தனது சினம் பொருந்திய வேலேந்திய சேனையோடு, கங்கைப் பேர்யாற்றுக்
கரை யகம் புகுந்து - கங்கையாற்றின் கரையிடத்தே சென்று, பாற்படு மரபிற் பத்தினிக்
கடவுளை - யாவரும் வணங்கும் பகுதியிலே பட்ட முறைமையினையுடைய பத்தினிக் கடவுளை, நூல்திறன்
மாக்களின் நீர்ப்படை செய்து - நூல்களின் கூறுபாட்டை உணர்ந்தோரால் நீர்ப்படுத்து
;
பத்தினிக் கடவுள் என்றது கடவுள் எழுதிய
கல்லினை. பகுதிப் பட்ட மரபாலே நீர்ப்படை செய்து என்றுமாம். நீர்ப்படை செய்தல்
- நீராட்டுதல். |
|