4. நீர்ப்படைக் காதை




70

மாமுனி பொதியின் மலைவலங் கொண்டு
குமரியம் பெருந்துறை யாடி மீள்வேன்

ஊழ்வினைப் பயன்கொல் உரைசால் சிறப்பின்
வாய்வாட் டென்னவன் மதுரையிற் சென்றேன்


68
உரை
71

        மாமுனி பொதியில் மலைவலங் கொண்டு-அகத்தியனுறையும் பொதியின் மலையை வலஞ்செய்து, குமரியம் பெருந்துறை ஆடி மீள்வேன் - குமரியின் அழகிய பெரிய துறைக் கண்ணே நீராடி மீளும் யான், ஊழ்வினைப் பயன்கொல்-முன்னை வினையின் பயனோதான், உரைசால் சிறப்பின் வாய்வாள் தென்னவன் மதுரையிற் சென்றேன் - புகழ்மிக்க சிறப்பினையுடைய வினைவாய்த்த வாளினையுடைய பாண்டியனது மதுரை நகரத்துச்சென்றேன் ;

இவ்வாறே, 1"மாதவ முனிவன் மலைவலங் கொண்டு, குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து, தமர்முதற் பெயர்வோன்" என முன்னர் வந்தது காண்க. ஆங்குச் சென்று தீயன கேட்டற் கமைந்தே னென்பது கருத்தாக "ஊழ்வினைப் பயன்கொல்..... சென்றேன்" என்றான் என்க.


1. சிலப். 15 : 14-6.