|
|
வலம்படு தானை மன்னவன் றன்னைச்
சிலம்பின் வென்றனள் சேயிழை யென்றலும்
|
|
வலம் படு தானை மன்னவன் தன்னை - வெற்றியுண்டா தற்குக் காரணமாகிய சேனையினையுடைய பாண்டிய
மன்னனை, சிலம்பின் வென்றனள் சேயிழை என்றலும் - கண்ணகி தன் சிலம்பினால் வெற்றி
கொண்டனள் என்ற செய்தியைக் கேட்ட வளவில் ;
சிலம்பின் வென்றனள் என்றது பாண்டியன் கோவலனைக் கொல்வித்துக் கண்ணகியால் தன்
அரசியல் பிழைத்தமையறிந்து அரசு கட்டிலிலிருந்தவாறே துஞ்சிய வரலாற்றை அடக்கியுள்ளது.
|
|