|
75 |
தாதெரு மன்றத்து மாதரி யெழுந்து
கோவலன் தீதிலன் கோமகன் பிழைத்தான்
அடைக்கல மிழந்தேன் இடைக்குல மாக்காள்
குடையும் கோலும் பிழைத்த வோவென
இடையிரு ளியாமத் தெரியகம் புக்கதும்
|
|
தாது எரு மன்றத்து மாதரி யெழுந்து-தாதாகிய எருப் பொருந்திய மன்றத்திடத்தே மாதரி தோன்றி,
கோவலன் தீது இலன் - கோவலன் குற்றமுடையனல்லன், கோமகன் பிழைத் தான் - மன்னனே
தவறிழைத்தான், அடைக்கலம் இழந்தேன் இடைக்குல மாக்காள்-இடையர் குலத்துப் பிறந்த
மக்காள் யான் அடைக்கலப் பொருளைக் காக்குந் தகுதியின்றி இழந்து விட்டேன், குடையுங்
கோலும் பிழைத்தவோவென-குடிகட்கு நிழல் செய்யுங் குடையும் நீதிசெய்யும் செங்கோலும்
வழுவினவோ என்று கூறி, இடையிருள் யாமத்து எரியகம்புக்கதும் - இருள்மிக்க இடையாமத்தே
தான் தீயிடை மூழ்கியதும் ;
தாது எரு - பொடியாகிக் கிடக்கும்
எரு. அரசன் குடிகளிடத்து அருளும் நீதியும் உடையனாதல் இன்றியமையாத தாகலான், அவ் விரண்டன்
குறியாகிய குடையுங் கோலும் பிழைத்தவோ வென்றாள். பிழைத்தவோ என்றாள், முன்னர்ப்
பிழையாமைபற்றி. |
|