|
80
|
தவந்தரு சிறப்பிற் கவுந்தி சீற்றம்
நிவந்தோங்கு செங்கோல் நீணில வேந்தன்
போகுயிர் தாங்கப் பொறைசா லாட்டி
என்னோ டிவர்வினை யுருத்த தோவென
உண்ணா நோன்போ டுயிர்பதிப் பெயர்த்ததும்
|
|
தவந்தரு சிறப்பிற் கவுந்தி சீற்றம்-தவத்தின் சிறப் பினையுடைய கவுந்தியடிகளின் சீற்றத்தினை,
நிவந்து ஓங்கு செங் கோல் நீணிலவேந்தன் போகு உயிர் தாங்க-மிக்குயர்ந்த செங் கோலினையுடைய
பெருநில மன்னனாம் பாண்டியனது சாக்காடு தணித்திட, பொறைசா லாட்டி - பொறுமை மிக்க
கவுந்தியடிகள், என்னோடு இவர் வினை உருத்ததோ என - இவ்விருவர் தீவினையும் என்னோடு
இவர்களைக் கொணர்ந்து பயனளிக்கத் தோன்றிற்றோவென எண்ணி, உண்ணா நோன்போடு உயிர்
பதிப் பெயர்த்ததும் - உண்ணாவிரதத்தினால் உயிரை உடம்பி னின்றும் நீக்கியதும் ;
சீற்றத்தைப் போகுயிர் தாங்க என்க.
தாங்கல் - ஈண்டுத் தணித்தல். வேந்தன் துஞ்சிற்றிலனேற் சபித்திடுவாரென்பது போதரும்.
ஓ, இரக்கமுமாம். |
|