|
85
|
பொற்றேர்ச் செழியன் மதுரை மாநகர்க்கு
உற்றது மெல்லாம் ஒழிவின் றுணர்ந்தாங்கு
|
|
பொன் தேர்ச் செழியன் மதுரைமா நகர்க்கு உற்ற தும் - அழகிய தேரினையுடைய பாண்டியனது
பெரிய மதுரை நகரத்திற்கு உற்ற தீமையும், எல்லாம் ஒழிவு இன்று உணர்ந்து - ஆகிய எல்லாவற்றையும்
எஞ்சுதலின்றி அறிந்து ;
மதுரைக்குற்றது, எரியுண்டது. இன்றி
என்பது இன்றெனத் திரிந்தது. மதுரையிற் சென்றேன் ஆங்கண் புக்கதும் பெயர்த்ததும் உற்றதும்
ஆகிய எல்லாவற்றையும் உணர்ந்து பெயர்ந்தேன் என்க. மேல் அடைக்கலக் காதையில், குமரியாடிப்
போந்த மாடலன் மது ரையிற் கோவலனைக் கண்டு அவன் கண்ணகியுடன் போந்ததற்கு இரங்கினமை
கூறப்பட்டிருத்தலின், அவன் பின்னரும் சின்னாள் அங்கிருந்து யாவற்றையும் அறிந்து சென்றான்
என்பது பெற்றாம். |
|