4. நீர்ப்படைக் காதை

85

உற்றது மெல்லாம் ஒழிவின் றுணர்ந்தாங்கு
என்பதிப் பெயர்ந்தேன் என்துயர் போற்றிச்
செம்பியன் மூதூர்ச் சிறந்தோர்க் குரைக்க


85
உரை
87

        ஆங்கு என் பதிப் பெயர்ந்தேன் என் துயர் போற்றி - அவ்வளவிலே என் பதிக்கு மீண்டேனாய் எனது துன்பத்தைப் பொறுத்துச் சென்று, செம்பியன் மூதூர்ச் சிறந்தோர்க்கு உரைக்க - சோழன் மூதூராகிய புகார் நகரத்தில் அவர்க்குச் சிறந்தோராகிய உறவினர்க்குக் கூற ;

பெயர்ந்தேன், முற்றெச்சம். என் துயர் என்றது அவர்க்குற்ற பொல்லாமையால், தான் எய்திய துயரம். போற்றி - பொறுத்து என்னும் பொருட்டு. சிறந்தோர் - தாய் தந்தை முதலிய உறவினர்.