4. நீர்ப்படைக் காதை

 

துறந்தோன் மனைவி மகன்துயர் பொறாஅள்
இறந்ததுய ரெய்தி இரங்கிமெய் விடவும்


96
உரை
97

        துறந்தோன் மனைவி மகன் துயர் பொறாஅள் - அங்ஙனந் துறந்தோனாகிய மாசாத்துவான் மனைவி தன் புதல்வற்கு எய்திய துன்பத்தினைப் பொறாளாய், இறந்த துயர் எய்தி இரங்கி மெய் விடவும் - மிக்க துன்பமுற்று வருந்தி உடலினை விட்டிடவும் ;
        மகன் துயர் - மகனுக்குற்ற துயர் ; ஆவது கொலை.