4. நீர்ப்படைக் காதை




100

கண்ணகி தாதை கடவுளர் கோலத்து
அண்ணலம் பெருந்தவத் தாசீ வகர்முன்

புண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும்


98
உரை
100

        கண்ணகி தாதை கடவுளர் கோலத்து-கண்ணகியின் தந்தை முனிவர் கோலத்துடன், அண்ணல் அம்பெருந் தவத்து ஆசீவகர்முன் - தலைமை யமைந்த மிக்க தவத்தினையுடைய ஆசீவகர் முன்னர், புண்ணியதானம் புரிந்து அறங்கொள்ளவும் - புண்ணியமாகிய தானஞ்செய்து துறவத்தினை மேற்கொள்ளவும் ;

        கடவுளர் - ஈண்டு முனிவர். 1"கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம்" என வருதல் காண்க. ஆசீவகம் - சமண சமயத்தின் வகையுள் ஒன்று. புண்ணியதானம் - பிறப்பினை யொழித்தற்குச் செய்யுந் தானம் ; 2"போதியின்கீழ் மாதவர்முன் புண்ணியதானம் புரிந்த, மாதவி தன்றுறவும்" என மேல் வருவதுங் காண்க.


1. சிலப், 11 : 5.
2. சிலப். 29. "காதலன்றன்."