4. நீர்ப்படைக் காதை



தானம் புரிந்தோன் றன்மனைக் கிழத்தி
நாள்விடூஉ நல்லுயிர் நீத்துமெய் விடவும்


101
உரை
102

        தானம் புரிந்தோன் தன் மனைக் கிழத்தி - அங்ஙனந் தானஞ் செய்து துறந்தோனாய மாநாய்கன் மனைவி, நாள்விடூஉ நல்லுயிர் நீத்து மெய் விடவும் - வாழ்நாளைவிட்டு நல்ல உயிரினைத் துறந்து உடம்பை யொழிக்கவும் ;

        நாள் - வாழ்நாள். விடூஉ, வினையெச்சம்.