4. நீர்ப்படைக் காதை



110

என்வாய்க் கேட்டோர் இறந்தோ ருண்மையின்

நன்னிர்க் கங்கை யாடப் போந்தேன்
மன்னர் கோவே வாழ்க ஈங்கெனத்


109
உரை
111

        என்வாய்க் கேட்டோர் இறந்தோர் உண்மையின் - என்னிடத்துக் கேட்டவர் இங்ஙனஞ் செய்யாநிற்க அவருள் இறந்தோரும் உண்டாகையால், நன்னீர்க் கங்கையாடப் போந்தேன் - தூய நீரினையுடைய கங்கையில் நீராட வந்தேன், மன்னர் கோவே வாழ்க ஈங்கு என - மன்னர் மன்ன இவ்வுல கத்து வாழ்வாயாக என்று போற்ற ;

        யான் கூறியது காரணமாக அவர் இறந்தபழி என்னைச் சாரு மாகலான் அது தொலைதற்குக் கங்கையாடப் போந்தேன் என்றான் என்க. நன்னீர் - தன்கண் ஆடினாரைத் தூய்மை செய்யுநீர்.