|
115
|
தோடார் போந்தை தும்பையொடு முடித்த
வாடா வஞ்சி வானவர் பெருந்தகை
மன்னவன் இறந்தபின் வளங்கெழு சிறப்பின்
தென்னவன் நாடு செய்ததீங் குரையென
|
|
தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்த-இதழ் மிக்க பனம்பூவினைத் தும்பைப் பூவொடு சூடிய,
வாடாவஞ்சி வானவர் பெருந்தகை - வஞ்சி நகரத்தையுடைய சேரர் பெருந்தகை, மன்னவன் இறந்தபின்
வளங்கெழு சிறப்பின் தென்ன வன் நாடு செய்தது ஈங்கு உரையென- நெடுஞ்செழியன் இறந்த பின்னர்
செல்வம் மிக்க சிறப்பினையுடைய பாண்டியனாடு செய்ததனை இப்பொழுது உரைப்பாயாக என்று
கேட்க ;
வாடாவஞ்சி, வெளிப்படை. மன்னவன்
- பாண்டியன் நெடுஞ் செழியன். |
|