|
120
|
மாடல மறையோன் மன்னவற் குரைக்கும்நின்
மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்
இளவரசு பொறாஅர் ஏவல் கேளார்
வளநா டழிக்கும் மாண்பின ராதலின்
ஒன்பது குடையும் ஒருபக லொழித்தவன்
பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய
|
|
நின் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா-நினது மைத்துனனாகிய சோழன் பெருங் கிள்ளியுடன்
சேராத, ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் - ஒத்த தன்மையினையுடை யராகிய ஒன்பது அரசர்கள்,
இளவரசு பொறார் - தாம் இள வரசாக இருத்தலைப் பொறாராய், ஏவல் கேளார் - அக் கிள்ளி
யின் ஏவலைக் கேளாராய், வளநாடு அழிக்கும் மாண்பினர் ஆதலின் - செல்வமிக்க நாடாட்சியினைச்
சிதைக்குந் தன்மையை உடையராயினா ராகலான், ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து - அவர்களுடைய
ஒன்பது குடையினையும் ஒரே பகலில் ஒழித்து, அவன் பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்
- அவ் வளவனது அழகிய ஆக்கினா சக்கரத்தை ஒருநிலைப் படச் செய்தோய் ;
கிள்ளி - பெருங்கிள்ளி ; பெருநற்
கிள்ளி யெனவும் கூறப்படு வன் ; இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளி யென்பான் இவனே போலும்.
ஒன்பது மன்னரும் சோழர் குலத்தினரென்பது 1"ஆர்
புனை தெரிய லொன்பது மன்னரை, நேரிவாயி னிலைச்செரு வென்று," 2
ஆராச் செருவிற் சோழர் குடிக் குரியோர், ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து, நிலைச்செருவினாற்
றலையறுதது" என்பவற்றாற் பெறப்படும். ஒத்த பண்பினர் - ஒரு பெற்றியே பெருங் கிள்ளி
யுடன் பகைமை பூண்டவர் ; தவற்றால் ஒத்த பண்பினையுடையர் என்பர் அரும்பதவுரை யாசிரியர்.
இளவரசு - இளையனாயுள்ளான் அரசாளுதலை யென்றுமாம். மாண்பு - ஈண்டு இயல்பு.
|
1.
சிலப். 28 : 116--7.
2. பதிற் 5. பதி.
|
|